Moondraam Pirai

Thursday, May 25, 2006

கம்யூனிஸம் வேண்டாம் போ..

எல்லோரும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் கிடைக்கும். சமத்துவம் இருக்கும். அமைதி இருக்கும். அப்புறம் ஏன் கம்யூனிஸம் வேண்டாம் என்கிறாய்?
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்..."
கம்யூனிஸம் உழைக்கத்தானே சொல்கிறது?
ஆனால் தனிமனிதனின் தனித்தன்மையை உறங்க வைத்து விடும்.
எப்படிச் சொல்கிறாய்?
ஒரு மனிதனின் உண்மயான தனிமனித ஆற்றல் எப்பொழுது வெளிப்படும் தெரியுமா? தான் எந்த இடத்தில் அழிந்து போய்விடுவோம் என்கிற பயம் வருகிறதோ, தான் எந்த இடத்தில் தோற்றுப் போய்விடுவோம் என்கின்ற பயம் வருகிறதோ, எங்கே போராடி வெல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தனிமனிதம் மிகத் துடிப்போடு வேலை செய்ய ஆரம்பிக்கும்.
"The Survival to live is the core of Darvinism".
பரிணாமம்: வாழப் போராடும்போது, வாழத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள ஏற்படும் மாற்றம்.
The only unchangable in this world is "Change". The change to live, to survive...
One real story to prove:
ஜப்பானில் ஒரு ஹோட்டலில் ஒரு சிறப்பு வகை மீன் மட்டும் மிகவும் விரும்பி உண்ணப்பட்டது. ஆனால் அந்த மீன் தேவையான அளவுக்குக் கிடைக்கவில்லை; எனவே ஹோட்டல் நிர்வாகம் தானே அந்தக் குறிப்பிட்ட வகை மீனை வளர்க்க ஆரம்பித்தது. கடல் உணவு, கடல் நீர் என கடலில் உள்ள சூழ்நிலை கொண்ட ஒரு பெரிய நீர்த் தொட்டியில் அந்த மீன்கள் வளர்க்கப்பட்டன. ஆனால் வளர்க்கப்பட்ட மீன், கடலிலிருந்து பிடித்து வரப்பட்ட மீனை விட சுவை குறைந்ததாக இருந்தது. காரணம் புரியாமல் நிர்வாகம் விழித்தது. அந்த ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அந்த தொட்டிக்குள் ஷார்க் ஃபிஷ் விடப்பட்டது. சில நாட்களில் அந்த தொட்டியில் வளர்க்கப் பட்ட மீன்களின் சுவை கூடியிருப்பது தெரிந்தது. அந்த ஊழியரிடம் காரணம் கேட்ட பொழுது அவர் சொன்ன காரணம், போராடும் உயிர்களுக்குத்தான் இரத்தம் சூடாக இருக்கும். இரத்தம் சூடாக இருந்தால் தான் அந்த உயிரினம் ஆரோக்கியமாக இருக்கும்.
Fact1: வேட்டையாடும் விலங்குகள் தங்கள் இரைகளை, அவை களைத்து போகும் வரை துறத்தி, பிறகு தான் கொல்லும்.
Fact2: ப்ராய்லர் வகை கோழியை (செத்த கோழி) விட நாட்டுக்கோழி சூப்பர் அப்பிடின்னு நம்ம ஊர்ல ஏன் சொல்லுராங்கன்னு இப்பத் தெரியுதுங்களா.
Fact3: அசைவமா பேசிட்டனுங்கோ.. சிவ சிவா மன்னிசுருப்பா.. நமக்கு எப்பவும் சாமியிலையும், சமயலிலும் சைவம்தான் பிடிக்கும்.
Fact4: கம்யூனிஸதுக்கும் மேற்படி மேட்டர்களுக்கும் என்ன சம்பந்தம்னா.. "மனுஷன் அவனோட தெறமய வெச்சு பெரியாளா ஆனா சந்தோஷப்படு, பாரட்டு... ஒருத்தன் முன்னாடிப் போனாத்தான் அவனப் பாத்து பின்னாடி இன்னொருத்தன் முன்னேறுவான். முன்னேறலன்னாலும் முயற்ச்சியாவது பண்ணுவான். இப்படி இல்லாம, இருக்கிற எடத்துலயே எல்லாமே கெடைக்கும்னா உடம்பு பாடுபட்டாலும், மனசு, மூளை எல்லாம் துருப்பிடிச்சிப் போயிறும்".
Haa.. I finished.. I poured out.. Achacho.. Karl Marx enna nenaippaar.. Oru velai avar idha padichu avaroda kolgaiya maathittaa.. Kadavule. Sasi blade podhum romba aruthutta. Nee romba buthisaalinnu ellaarum solliruvaanga.. Niruthittu kelambu kannu.. kelambu.. Meet u with a discussion about "Thedal" in next blog. Bye.

9 Comments:

  • At 7:33 AM, Blogger Syam said…

    Karl Marx ah pathi pesara varaikum nalla irundhathu...appuram uteengale oru kathai...soooobber...

     
  • At 7:36 AM, Blogger Bharani said…

    Nice post...Chumma vakkil mathiri points ellam puthu puthu vaikareenga...

    I totally agree with
    பரிணாமம்: வாழப் போராடும்போது, வாழத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ள ஏற்படும் மாற்றம்

    On the same lines ennaku pudicha thathuvam ithu
    வாழ்க்கையே போர்க்களம்
    வாழ்ந்துதான் பார்க்கனும்

    போர்க்களம் மாறலாம்
    போர்கள்தான் மாறுமா

     
  • At 1:24 AM, Blogger Sasiprabha said…

    syam.. Karl Marx variakkum naan pesinen. Appuram ennoda manasaatchi pesichu.. Adhu eppavume ippidithaan superaa pesum.

    Bharani.. Thanks.. The lines "vazhkkaiye porkkalam..." ever resides within me.. ennai depressionla irundhu veliya kondu vara indha lines and "Indha nilaum nirandharam illai" - indha lines repeatedaa naan enakkulla sollikkuven.

     
  • At 10:14 PM, Blogger Unknown said…

    Nice post.
    Finally u agreed that u have put blade ;-)....he hee heee...kidding

     
  • At 7:33 PM, Blogger Gopalan Ramasubbu said…

    adangappa,epadinga ipaadi ellam mudiyuthu ungalala?;)

     
  • At 11:32 PM, Blogger Sasiprabha said…

    Gopi, i've lot of Gurus like you in creating blogs. Mudiyaadha pinne.

     
  • At 9:53 PM, Blogger Unknown said…

    I have tagged you ;-)

     
  • At 2:33 PM, Blogger Ram said…

    Good one...I liked this post very much.because i am also sort of Anti-Communist :))

    Yenno da blod la kuda communism pathi thittinen..am sort hardliner against Communism...

    http://ram77.blogspot.com/2005/12/yethartha-arasiyal.html

     
  • At 10:35 PM, Blogger செந்தணல் said…

    Good, U have a different thinking.

    But here the people have no rights to fight for their basics.

    எல்லோரும் இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை எல்லாம் கிடைக்க வேண்டும். is a part of the communism. Pls understand communism...

    Thanks to giving me this oppertunity.

     

Post a Comment

<< Home